விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமிக்கு, கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவரான சோ ராமசாமி, சென்னையில் காலமானார். அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் அஞ்சலி செலுத்த நேரில் வர முடியவில்லை. ஆகையால் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛இன்னொரு ஜாம்பவான் மறைந்தார், அன்னாரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கூறியுள்ளார்.