Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பன்முக திறமையாளர் சோ ராமசாமி....!

07 டிச, 2016 - 10:05 IST
எழுத்தின் அளவு:
Cho-ramaswamy-passes-away

புகழ்பெற்ற பத்திரிகையாளரும், வழக்கறிஞரும், நடிகரும், கதாசிரியருமான சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 82 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இன்றி சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.


சோ வாழ்க்கை : நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவர். 1934 அக்., 15ல் சென்னையில் பிறந்தார். பெற்றோர் சீனிவாசன் - - ராஜலட்சுமி. பி.எஸ்.சி., பி.எல்., படித்துள்ளார். வக்கீலாக தொழிலைத் தொடங்கினார். 1957 - 1962 வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். தொழிலைப் பொறுத்தவரை திறமையான வழக்கறிஞராகவே பணிபுரிந்தார். டி.டி.கிருஷ்ணமாச்சாரி கம்பெனிக்கு சட்ட ஆலோசகராக இருந்தவர். 1966ல் திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


சினிமா வாழ்க்கை : திரைப்பட துறையில் நாடக நடிகர், காமெடி, குணச்சித்திர நடிகர், இயக்குநர் என பல பிரிவுகளிலும் முத்திரை பதித்துள்ளார். இவருடைய பாத்திரங்களில் நகைச்சுவையுடன் அரசியல் கலந்திருப்பது சுவையானது. 1957ம் ஆண்டிலேயே நாடகங்களை எழுத தொடங்கினார். 1963ல் வெளியான பார் மகளே பார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். சிவாஜி நடித்த இப்படத்தில் "பைக் மெக்கானிக்காக சோ நடித்திருப்பார். இது பெரும் வரவேற்பை பெற்றது.


இதன் பின் தேன் மழை, பெற்றால் தான் பிள்ளையா, நான் யார் தெரியுமா, மனம் ஒரு குரங்கு, நினைவில் நின்றவள், லட்சுமி கல்யாணம், ஒளி விளக்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ், பொம்மலாட்டம், எங்கள் தங்கம், குமரி கோட்டம், ஆசிர்வாதம், உனக்கும் எனக்கும், தவப்புதல்வன், புகுந்த வீடு, தெய்வ சங்கல்பம், குரு சிஷ்யன், அதிசியப் பிறவி, ஆறிலிருந்து அறுபதுவரை, அடுத்த வாரிசு, மனிதன், கழுகு, காதலா காதலா, கலாட்டா கல்யாணம், முகமது பின் துக்ளக், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், ஆயிரம் பொய், அன்பைத் தேடி, மனிதரில் மாணிக்கம், எங்க வீட்டு கல்யாணம், சங்கே முழங்கு, சி.ஐ.டி.சங்கர் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 6 தெலுங்கு மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார்.


நாடக வாழ்க்கை: சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.


சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கும் நேரம், இறைவன் இறந்துவிட்டானா, உண்மையே உன் விலை என்ன, மெட்ராஸ் பை நைட் உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி தயாரித்துள்ளார்.




தொலைக்காட்சி தொடர் : சில தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்துள்ளார். 14 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 10 நாவல்களை எழுதியுள்ளார். மகாபாரதத்துக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். ராமாயணத்துக்கும் அவர் விளக்கம் எழுதினார். விவேகா நுண்கலை என்ற 40 பேர் குழுவை வழிநடத்தினார்.


சிறந்த நாடகம் : இவரது மேடை நாடகமான "முகமது பின் துக்ளக் எனும் அரசியல் நையாண்டி நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின் திரைப்படமாக 1971ல் வெளிவந்தது. சோ, மனோரமா உள்ளிட்டடோர் நடித்திருப்பார்கள், இசை எம்.எஸ்.விஸ்வநாதன். ஆயிரம் முறைக்கு மேல் மேடையில் அரங்கேற்றப்பட்டது.


இயக்கிய படங்கள் : முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, மிஸ்டர் சம்பத், யாருக்கும் வெட்கமில்லை, சம்போ சிவ சம்போ ஆகிய 5 படங்களை இயக்கியுள்ளார்.


எந்தெந்த நடிகர்கள் : சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன், சிவக்குமார், ரவிச்சந்திரன், கமல், விஜயக்குமார், ரஜினி, விஜயகாந்த், பாண்டியன், சத்யராஜ், சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் சோ.ராமசாமி நடித்துள்ளார்.


நகைச்சுவை உணர்வு : இவர் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் கை தேர்ந்தவர். ஒரு விழாவின்போது, சோ பற்றிய சிறு குறிப்பு வாசிக்கப் பட்டது. அப்போது அவருக்கு வயது 64 என்பது குறிப்பிடப்பட்டது. அப்போது சோ, ""இந்த அரங்கத்தில் இருப்பவர்களிலேயே நான்தான் இளமையானவன் என் தலையில் ஒரு நரையைக் காட்ட ¬முடியுமா? என்றார் தனது தலையைத் தடவிக் கொண்டே. கூட்டத்தில் வாஜ்பாய் உட்பட்ட அனைவரும் சிரித்தனர். பொதுவாக அவர் பல விஷயங்களைப் பற்றி பேசும் போதும் நகைச்சுவையே மேலோங்கும்.


விருதுகள் : இவருடைய பத்திரிகைப் பணியைப் பாராட்டி பாஞ்சஜன்ய இந்திப் பத்திரிகை 1998 நவம்பர் 26ல் நசிகேதா விருதை வழங்கியது. இவ்விருதை பிரதமர் வாஜ் பாய் அவருக்கு வழங்கினார். சிறந்த பத்திரிகைப் பணிக் காக பி.டி.கோயங்கா விருது, புலனாய்வுப் பத்திரிகைத் துறைக்கான கந்தூரி வீரேசலிங்கம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளவர்.


"சோ எப்படி வந்தது : இவருக்கு "சோ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவரது கதாபாத்திரம் "சோ. இதில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. இதனால் இவருக்கு இப்பெயர் வந்தது.




ராஜ்யசபா எம்.பி., : 1999ம் ஆண்டு ராஜ்யசபா நியமன எம்.பி., ஆக, அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்டார். 2005 வரை எம்.பி., யாக பணியாற்றினார்.


துக்ளக் : 1970ம் ஆண்டு "துக்ளக் என்ற அரசியல் வார பத்திரிகையை தொடங்கினார். இதன்பின் தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் விமர்சிக்கும் மாபெரும் பத்திரிகை யாளரானார். இவரின் "அரசியல் நையாண்டி எழுத்துக்கள் , பத்திரிகை உலகில் இவருக்கு தனி இடம் வகுத்து தந்தது. அரசியலில் புரையோடியுள்ள குற்றச் செயல்கள், ஊழல், பிரிவினைவாதம் ஆகிய நச்சு சக்திகளுக்கு எதிராக போராடியவர்.


இவருடைய எழுத்துக்களால் மத்திய - மாநில அரசுகளின் கோபத்துக்கு உள்ளானவர். பத்திரிகையாளர் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டவர். 1975ல் எமர்ஜென்சி அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். "பிக்வாக் என்ற ஆங்கில இதழின் வெளீயீட்டாளர், ஆசிரியராகவும் இருந்தார்.


அரசியல் : 1996 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுடன், மூப்பனாரின் த.மா.கா., வை கூட்டணி சேர்த்து, வெற்றி பெற்றதற்கு பெரும் பங்காற்றினார். அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமானவராக திகழந்தார்.ஆனால் இந்த உறவு நிலைக்கவில்லை.


கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தன கடத்தல் வீரப்பன் கடத்திய நிகழ்வில், கருணாநிதியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்தார். கருணாநிதியை விட்டு பிரிந்தார். அதே போல 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.


தனது பத்திரிகை மூலம் ஜே.பி.கிருபளாணி, இந்திரா, கருணாநிதி, சரண் சிங், காமராஜ், மொராஜி தேசாய், சந்திரசேகர், மூப்பனார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ், வாஜ்பாய், அத்வானி, மோடி உள்ளிட்ட தலைவர்களை பற்றி விமர்சன கட்டுரை எழுதியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in