ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் பாடலாசிரியரானவர் கங்கை அமரன். அதன்பிறகு கோழிக்கூவுது படத்தில் இயக்குனரானார். பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட பல படங்களை இயக்கியவர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பின்னணியும் பாடியிருக்கிறார். இப்படி பலமுகம் கொண்ட கங்கை அமரனை, ஒரு நேரத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கவும் பாரதிராஜா முடிவு செய்திருக்கிறார்.
அப்படி அவர் நடிக்க இருந்த படம்தான் புதிய வார்ப்புகள். ஆனால், அவர் நடிக்க யிருப்பதாக முடிவான பிறகு சில எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டாராம். இப்படி சொல்லும் கங்கைஅமரன், நான் புதிய வார்ப்புகள் படத்தில் இருந்து விலகிய பிறகுதான் பாரதிராஜாவின் உதவியாளரான கே.பாக்யராஜ் அந்த படத்தில் ஹீரோவாகி விட்டார். அவர் அதற்கு முன்பு 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.
ஆக, புதிய வார்ப்புகள் படத்தில் இருந்து நான் விலகியதால் அதில் நடித்த கே.பாக்யராஜ், அந்த படத்தின் வெற்றி காரணமாக பின்னர் பெரிய ஹீரோவாகி விட்டார். அப்படி ஒருவேளை நானே அந்த படத்தில் நடித்திருந்தால் நானும் பெரிய நடிகராகியிருப்பேன் என்கிறார் கங்கைஅமரன்.