ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இதில் இது என்ன மாயம் படத்திற்கு பின்னர் அவர் கமிட்டாகி நடித்த படம்தான் பாம்பு சட்டை. பாபி சிம்ஹா நாயகனாக நடித்துள்ளார். ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இழுபறியில் கிடந்த இந்த படம் சமீபத்தில்தான் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
மேலும், ஒரு புரட்சிகரமான இளைஞனாக பாபி சிம்ஹா நடித்துள்ள இந்த படத்தில் ஒரு எக்ஸ்போட்டில் வேலை செய்யும் ஏழை பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதுவரை அவர் நடித்து வெளியாகியுள்ள படங்களில் கலர்புல்லான காஸ்டியூம்களில் தோன்றியவர், இந்த படத்தில் ஏழ்மையை வெளிப்படுத்தும் பாவாடை தாவணி உடையணிந்து நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, சில காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் வகையிலும் நடித்துள்ளாராம். அதனால் இந்த பாம்பு சட்டை வந்தால் அவரது இன்னொரு பரிமாணத்தை காட்டும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.