Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுக்கு 60 அடி உயர கட்அவுட்

07 டிச, 2016 - 08:34 IST
எழுத்தின் அளவு:
60-feet-cut-out-for-actor-prabhu

ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் நடித்து வரும் படம் எங்கிட்ட மோதாதே. அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக ராஜாஜி, பார்வதி நாயர் நடிக்கிறார்கள். ராதாரவி வில்லனாக நடிக்கிறார். எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசை அமைக்கிறார். ராமு செல்லப்பா இயக்குகிறார். ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.


இந்தப் படம் 1985ல் நடக்கிற கதை. திருநெல்வேலியில் ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் மோதிக் கொள்ளும் கதை. நட்டி ரஜினி கட்அவுட் வரைகிறவர். ராஜாஜி கமல் கட்அவுட் வரைகிறவர். இருவரும் வெறிபிடித்த ரசிகர்கள், தொழில் போட்டியாளர்கள். இவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தியேட்டர் முதலாளி ராதாரவி இவர்களுக்குள் நடக்கும் அரசியல் கதை.


இந்த படத்தில் மறைந்து போன கட்அவுட் கலாச்சாரம் கதையின் மைய பகுதி. ரஜினி, கமலுக்கு விதவிதமான கட்அவுட்கள் தயார் செய்து அதனை படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் பிரபுவின் 60 அடி உயர கட்அவுட்டும் வைத்து படமாக்கி இருக்கிறார்கள். கதை நடக்கும் காதலதில் குரு சிஷ்யன் படம் வெளிவருவதால் அவரது கட்அவுட்டும் இடம்பெறுகிறது. பிரபு ஹீரோவாக நடிக்கிற காலத்தில்கூட அவருக்கு 60 உயரத்தில் கட்அவுட் வைக்கப்பட்டதில்லை. இப்போது இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in