பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மூத்த பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 82 வயதான இவர் உடற்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
பன்முக திறமை கொண்டவர் : சிறந்த அரசியல் விமர்சகராக இருந்த இவர், தான் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது பெரிதும் புகழ் பெற்றார்.
1963ல் வெளியான பார் மகளே பார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். சிவாஜி நடித்த இப்படத்தில் "பைக் மெக்கானிக்காக சோ நடித்திருப்பார். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் தேன் மழை, பெற்றால் தான் பிள்ளையா, நான் யார் தெரியுமா, மனம் ஒரு குரங்கு, நினைவில் நின்றவள், லட்சுமி கல்யாணம், ஒளி விளக்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ், பொம்மலாட்டம், எங்கள் தங்கம், குமரி கோட்டம், ஆசிர்வாதம், உனக்கும் எனக்கும், தவப்புதல்வன், புகுந்த வீடு, தெய்வ சங்கல்பம், குரு சிஷ்யன், அதிசயப் பிறவி, ஆறிலிருந்து அறுபதுவரை, அடுத்த வாரிசு, மனிதன், கழுகு, காதலா காதலா, கலாட்டா கல்யாணம், முகமது பின் துக்ளக், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், பொம்மலாட்டம், எங்கள் தங்கம், ஆயிரம் பொய், அன்பைத் தேடி, மனிதரில் மாணிக்கம், எங்க வீட்டு கல்யாணம், சங்கே முழங்கு, சி.ஐ.டி.சங்கர் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 6 தெலுங்கு மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார். இதே போல் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல சினிமா ஜாம்பவான்களுடன் நடத்துள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு வசனம், இயக்கம் என பல துறைகளின் தன் திறமையை காட்டியவர்.
சோவின் உடல் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்களும், திரைத்துறையினரும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.