அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
மறைந்த முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதிச்சடங்கில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலகுறைவால் இரண்டரை மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலன் இன்றி நேற்று(டிச.,5-ம் தேதி) இரவு 11.30 மணியளவில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடலுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ், ரஜினி, இளையராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஜெயலலிதாவின் உடல் ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., சமாதி அருகே கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் செய்தனர்.
ஜெயலலிதா நம் பார்வையிலிருந்து விலகிவிட்டாரே தவிர, நம் இதயத்தில் இருந்து அல்ல... என்பது மட்டும் திண்ணம்...!