அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
பாலிவுட்டின் ‛மோஸ்ட் வாண்டட்' ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷ்ய் குமார். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛ருஸ்டம்'. தற்போது அஜய் பல படங்களில் நடித்து வந்தாலும், மீண்டும் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் ‛கிராக்' என்ற படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன் இப்படம் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 11-ம் தேதி ரிலீசாக போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ‛கிராக்' படத்தின் ரிலீஸ் தேதி மாறியிருக்கிறது.
ஏனென்றால் சமீபத்தில் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டார். அதில் ஷாரூக் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருத்தார். அதனால் ஷாரூக்-அக்ஷ்ய் படங்கள் இடையே மோதல் உருவாக இருந்தது. ஆனால் இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கிராக் படத்தின் திரைக்கதை பணியே இன்னும் முடியவில்லையாம். அதனால் படத்தை 2018-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவே அறிவிக்கும் என தெரிகிறது.