பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மறைந்த ஜெயலலிதாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் உடன் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார். கடந்த இரண்டரை மாதகாலமாக உடலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டுவிட்டரில் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்திருந்த ரஜினிகாந்த், காலை 11.45 மணியளவில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியுடன் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினி மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோரும் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.