பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். அவரின் மறைவு தமிழகம் முழுக்க சோக அலையை உருவாக்கியுள்ளது. பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரையுலகினரும் ஏராளமானபேரும் அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திரளான நடிகர்கள் திரண்டு வந்து ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், குட்டி பத்மினி, கோவை சரளா, கவுதமி, ராஜேஷ், நந்தா, ஸ்ரீமன், அஜய் ரத்னம், ராஜா உள்ளிட்ட பலர் நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர்.... இன்று மறைந்தது தனி மனிதர் அல்ல, ஒரு சகாப்தம் நிறைவுபெற்று இருக்கிறது. நடிகையாக, அரசியல் தலைவராக அவர் பயணித்த எல்லாவற்றிலும் உச்சத்தை பெற்றிருக்கிறார். பெண் நினைத்தால் எந்தளவுக்கு முன்னேற முடியும், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு என்பது அவர் ஒரு உதாரணம். எங்களுடைய சங்கத்தில் அவர் மூத்த உறுப்பினராக இருந்தது எங்களுக்கு எல்லாம் பெருமை. அவரின் சக்தி, செயல், மனோதைரியம் எல்லாம் யாருக்கும் வர முடியாது. அவரை இழந்து வாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். அவர் பயணித்த பாதையில் நாங்கள் பயணிப்போம்.
இவ்வாறு நாசர் கூறினார்.