10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் |
கடந்த ஆண்டு சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்தபோது பல இளவட்ட நடிகர்கள் களமிறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். நடிகர் சங்கம் சார்பில் விஷால் டீமும் மழை வெள்ளத்தில் இறங்கி உதவி செய்து வந்தனர். அப்போது நடிகர் சாந்தனு ஒரு பைக்கில் ஊர்ஊராக சென்று நிவாரண உதவி செய்தாராம். இதுபற்றி நடிகர் விஷால் கூறுகையில், சாந்தனு சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான். அதை நான் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அவர் செய்த உதவிகளைப்பார்த்துதான் தெரிந்து கொண்டேன். மழையில் நனைந்தபடியே வீதிவீதியாக சென்று மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் செய்தார். அந்த வகையில் அவர் ஒரு ரியல் ஹீரோவாக செயல்பட்டார்.
மேலும், சாந்தனுவை நான் எனது தம்பியாகத்தான் பார்க்கிறேன். அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். குறிப்பாக, முதல் வரிசையில் இருக்கும் பத்து நடிகர்களில் அவரும் ஒருவராக வர வேண் டும். தற்போது அவர் நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கும். ஒரு சகோதரனாக சாந்தனுவின் வெற்றிக்கு எப்போதும் நான் உறுதுணையாக இருப்பேன் என்கிறார் விஷால்