அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
கே.பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்த படம் டார்லிங் டார்லிங் டார்லிங். இந்த படத்தில்தான் பூர்ணிமா நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், முதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்கயிருந்தவர் சுகாசினியாம். அவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணி விட்ட கே.பாக்யராஜ் கால்சீட் கேட்டபோது, அதே தேதியில் அவர் ஒரு தெலுங்கு படத்திற்கு ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்தாராம்.
இருப்பினும் கே.பாக்யராஜ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அந்த தெலுங்குப்பட நிறுவனத்திடம் வேறு தேதியில் நடித்துத்தருவதாக சுகாசினி சொன்னபோது, அவர்கள் தங்களுக்கு கொடுத்த தேதியில் நடித்து தந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார்களாம். அதனால் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்பதை சொல்லி விட்டாராம் சுகாசினி. அதன்பிறகுதான் பூர்ணிமா அந்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த தகவலை, நேற்று முன்தினம் சென்னையில் கே.பாக்யராஜ்க்கு, ஆர்.பார்த்திபன் நடத்திய பாராட்டு விழாவில் தெரிவித்த சுகாசினி, நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் பூர்ணிமா அந்த படத்திற்குள் வந்திருக்கவே மாட்டார். நான் வெளியேறியதால்தான் அவர் நடித்தார். அந்த வகையில், கே.பாக்யராஜ்-பூர்ணிமா ஆகிய இருவருக்கும் திருமணம் நடப்பதற்கு நான் ஒரு கல்யாண புரோகிதர் போல் இருந்திருக்கிறேன் என்றார்