10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் |
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்திற்கு கதை வசனம் எழுதியவர் செல்வராகவன். அதன்பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இந்த படங்கள் காதல் கதைகளில் உருவானது. அதையடுத்து அவர் இயக்கிய படங்களில் காதலும் இருந்தபோதும் வெவ்வேறு கதைக்களங்களாக இருந்தன. இந்த நிலையில், தற்போது எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என்று குடும்ப பின்னணி கதையை இயக்கியிருக்கிறார் செல்வராகவன். அந்த படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சந்தானத்தை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார் செல்வராகவன். இந்த படம் அவரது ஆரம்ப கால படங்கள் மாதிரி முழு காதல் கதையில் உருவாகிறது. இதற்கு முன்பு சந்தானம் காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்த நிலையில், இந்த படம் பியூர் லவ் சப்ஜெக்டில் தயாராகிறது. இதுபற்றி செல்வராகவன் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், பல ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் காதலில் விழுவது சந்தோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது படங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை என்று ஹிட் பாடல்களின் வரிகளை டைட்டீலாக்கி வரும் செல்வராகவன், சந்தானத்துடன் இணையும் இந்த புதிய படத்திற்கு மன்னவன் வந்தானடி -என்ற பாடல் வரியை டைட்டீலாக்கியிருக்கிறார். அதேபோல் சந்தானமும், ஓடி ஓடி உழைக்கனும் என்ற எம்ஜிஆர் பாடல் தலைப்பில் தற்போது கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.