விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? |
1997ல் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமானவர் சிம்ரன். அந்த படத்தில் சிவாஜிகணேசன்-சரோஜாதேவியும் முக்கிய வேடத்தில் நடித்தனர். அதன்பிறகு விஐபி, நேருக்குநேர் என அடுத்தடுத்து விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் சிம்ரன். சில படங்களில் ஹோம்லியாக நடித்தபோதும் பல படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து இளசுகளின் மனங்கவர் நாயகியாக திகழ்ந்தார்.
ஆனபோதும் எல்லா நடிகைகளையும் போலவே திருமணத்திற்கு பிறகு சிம்ரனின் கதாநாயகி இடம் பறிபோனது. ஆனால் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் ஆகிய படங்களில் நடித்த சிம்ரன், தற்போது பார்த்திபன் இயக்கி நடித்துள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திலும் நடித்துள்ளார். ஆனால், முந்தைய படங்களில் நடித்தது போலவே இந்த படத்திலும் அவர் கெஸ்ட் ரோலில்தான் நடித்திருக்கிறார். ஆக, இந்த படம் சிம்ரன் நடிக்கும் 4வது கெஸ்ட் ரோல் படமாகும்.