அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
குத்து ரம்யாவிற்கு பிறகு பெங்களூரில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த இன்னொரு புதுவரவு நடிகையான ஷைனியும் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில் நான் செகண்ட் லீடாக நடித்தேன். அதையடுத்து இப்போது மியாவ், வீரய்யன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த படங்களில் வீரய்யனில் கிராமத்து கதையில் சிங்கிள் நாயகியாகவும், மியாவ் படத்தில் நகரத்து கதையில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராகவும் நடிக்கிறேன். இதில் மியாவ் படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடித்துள்ள நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் ஷைனி, கர்நாடகத்து பெண்ணாக இருந்தபோதும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது. அதனால் சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து புதிய படங்களுக்கான கதைகள் கேட்டு வருகிறேன் என்கிறார்.