ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து ஓடி ஓடி உழைக்கனும் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் இந்த படமும் காதல் கதையில்தான் உருவாகிறது. ஆனால், ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கிறார் சந்தானம். இதையடுத்து சேதுராமன் இயக்கும் சக்க போடு போடு ராஜா மற்றும் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
மேலும், இதுவரை காதல், பேய் படங்களில் நடித்தபோதும் காமெடி கலந்த கதைகளில் நடித்த சந்தானம், செல்வராகவன் படத்தில் துளியும் காமெடி இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை இன்னும் ரிலீசாகாதபோதும் இந்த படவேலைகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டது. அதோடு, இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவருக்குப் பதிலாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ள ரெஜினாவே நாயகியாக நடிப்பதாக இப்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.