ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெங்களூரு: பிற மொழிப்படங்களான பாகுபலி, கபாலி திரைப்படங்கள் மூலம், கர்நாடக அரசுக்கு கேளிக்கை வரியாக, 9 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.பெங்களூரில் பிற மொழி பேசும் மக்கள்தொகை அதிகம் என்பதால், பிற மொழிப்படங்கள் அதிகமாக திரையிடப்படுகின்றன.ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் படங்கள் அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுப்பதில் முதலிடம் வகிக்கின்றன.கர்நாடகாவில் கன்னட படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. பிறமொழி படங்களுக்கு,10 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. பெங்களூரு திரையரங்குகள் மூலமாக மட்டும், 2013 - 14ல், 77.62 கோடி ரூபாய், 2014 - 15ல், 82.72 கோடி ரூபாய், 2015 - 16ல், 109 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பிற நகரங்களையும் சேர்க்கும் போது வருவாய் அதிகரிக்க கூடும்.இதற்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களே காரணமென்று தெரிகிறது. ஏனெனில், இப்படங்கள் திரையிடும்போது டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படுவதால், வரித்தொகையும் அதிகமாக கிடைக்கிறது.பாகுபலி, கபாலி திரைப்படங்கள் மூலமாக மட்டுமே, 9 கோடி ரூபாயும், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் மூலம், 3.61 கோடி ரூபாயும், ஆங்கில படமான பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் மூலம், 3.6 கோடி ரூபாயும் கேளிக்கை வரியாக கிடைத்துள்ளது.முதல் இரண்டு வாரம் வரை, டிக்கெட் விலை உயர்த்தப்படுவதால் தயாரிப்பாளர்களுக்கும் போட்ட முதல் கிடைத்து விடுகிறது. அதன் பின், வழக்கமான கட்டணத்தில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கேளிக்கை வரி வசூலில் முதலிடத்தில் உள்ள பெங்களூரையடுத்து, மைசூரு, மங்களூரு நகரங்களிலும் பிற மொழிப்படங்கள் நல்ல வசூலை அள்ளித்தருகின்றன.பெரும்பாலும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் மூலமாக அதிக வருவாய் கிடைக்கிறது.