ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிச்சைக்காரன் மெகா ஹிட்டுக்குப்பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சைத்தான். இந்த படத்திற்கும் அவரே இசையமைத்து தயாரித்து நடித்துள்ளார். சாப்ட்வேர் இஞ்சினியராக அவர் நடித்துள்ள இந்த படம் சைக்கோ திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. முக்கியமாக, ஹீரோயிசம் என்பது இல்லாமல் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் குடும்ப பின்னணி கதையில் நடித்துள்ளார்.
உளவியல் சம்பந்தப்பட்ட இந்த கதையில், அவருக்குள் அவரது மனைவி பற்றிய பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்குமாம். அந்த வகையில், அவர் தனது மனைவியை பல வடிவங்களில் மனதில் போட்டு குழப்பிக்கொள்வாராம். அதோடு, அந்த படத்தின் ஆடியோ ரிலீசின்போது ஜெயலட்சுமி என்றொரு கேரக்டரை திரையில் காண்பித்து அதை சஸ்பென்சாக வைத்து விட்டனர்.
யார் அந்த ஜெயலட்சுமி? என்பதை இப்போது வரை சொல்லவில்லை. ஆனால் அந்த ஜெயலட்சுமியே, படத்தில் விஜய் ஆண்டனிக்கு மனைவியாக நடித்திருக்கும் அருந்ததி நாயர்தானாம். அந்த கேரக்டருக்குள் ஒரு மர்மம் உள்ளதாம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியை கொடுக்கும் என்கிறார்கள்.