ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கத்திச்சண்டை உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாடல்கள், இசையும் அவரேதான். இப்படி நாயகனாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல பரிமாணங்களில் வெளிப்படும் ஹிப்ஹாப் ஆதி, இந்த படத்தை மெகா ஹிட் படமாக்கி விட வேண்டும் என்று சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
அதோடு, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களில் சேட்ஜி என்று தொடங்கும் ஒரு பாடலை சமீபத்தில் யு-டியூப்பில் வெளியிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்த அந்த பாடல், ஒரு சமூகத்தினரை கிண்டல் செய்வது போன்று அமைந்திருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதோடு, மீசையை முறுக்கு படத்தின் தயாரிப்பாளரான டைரக்டர் சுந்தர்.சிக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சேட்ஜி பாடல் யு-டியூப்பில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.