ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சாண்டோ சின்னப்பா தேவர் கொஞ்சம் பிடிவாத குணமுள்ள தயாரிப்பாளார். முருக பக்தர், விலங்குகள் மீது தீரான அன்பு கொண்டவர். அவர் படங்களில் ஏதாவது ஒரு விலங்கிற்கு முக்கியத்தும் இருக்கும். தான் நினைத்ததை சாதித்து காட்டக்கூடியவர்.
அவர் 1967ம் ஆண்டு தெய்வசெயல் என்ற படத்தை தயாரித்தார். இதில் முத்துராமன், பாரதி, மேஜர் சுந்தர்ராஜன் நடித்திருந்தார்கள். விலங்குள் மீது நேசம் கொண்ட ஒரு மனிதன். அதை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுகிற கதை. அந்தப் படத்தில் யானை, புலி, சிங்கம், மாடு என பல விலங்குகளை நடிக்க வைத்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது. அது தேவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எவ்வளவு அருமையான கதை ஏன் தோற்றது என்று யோசித்துப் பார்த்தார். கதையின் வலுவுக்கேற்ற ஹீரோ அமையவில்லை என்று முடிவு செய்தார்.
பின்பு அதே கதையை கொஞ்சம் மாற்றம் செய்தார் பல விலங்குகளின் நேசன் என்பதை மாற்றி யானையின் நேசன் என ஆக்கினார். அதை நல்ல ஹீரோவை வைத்து மீண்டும் படமாக்க நினைத்திருந்தார். அப்போது தேவருடைய படங்களை பார்த்திருந்த இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா, விலங்குகளை மையப்படுத்தி எனக்கொரு படம் செய்து கொடுங்கள் என்று தேவரிடம் கூறியிருந்தார். அதன் பிறகு தேவர் ஹாத்தி மேரா சாத்தி இந்திப் படத்தை தயாரித்தார். 1971ல் வெளியான அந்தப் படம் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டனாது.
அதே படத்தை அடுத்த ஆண்டே எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் நல்ல நேரம் தயாரித்தார். இங்கும் அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரு தோல்வி படத்தின் கதையை அதன் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக இந்தியிலும், தமிழில் வெற்றிப் படமாக்கி காட்டினார் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர்.