சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மணல் கயிறு-2 படத்தில் மெச்சூரிட்டியான வேடத்தில் நடித்துள்ளார் பூர்ணா. கதைப்படி தனக்கு வரப்போகும் கணவர் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிசன்களை போடும் வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் இன்றைய நவீன பெண்கள் தங்களது வருங்கால கணவன் எப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் வேடத்தில் நடித்திருக்கிறார் பூர்ணா.
அதையடுத்து, மிஷ்கின் தயாரித்து கதை எழுதி வில்லனாக நடித்துள்ள சவரக்கத்தி படத்தில் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் ராமின் மனைவியாக நடித்துள்ளார். இதில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். அந்த வகையில் ஒரு சலூன் கடைக்காரரின் மனைவியாக பக்காவாக மாறி நடித்துள்ள பூர்ணாவிற்கு இந்த படம் பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என்கிறார் மிஷ்கின்.
இந்த படங்களைத் தொடர்ந்து, அரவிந்த்சாமி- திரிஷா நடித்து வரும் சதுரங்கவேட்டை-2 படத்திலும் தற்போது கமிட்டாகியிருக்கிறார் பூர்ணா. இந்த படத்தில் அரவிந்த்சாமி-திரிஷா இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. மாறாக, எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கிறார்கள். பூர்ணா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மணல்கயிறு-2, சவரக்கத்தி படங்களைப்போன்று இந்த சதுரங்கவேட்டை-2 படத்திலும் அழுத்தமான மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்கிறார் பூர்ணா.