மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அட்டகத்தி நந்திதா, ரெஜினா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இதில் ரெஜினா இளவட்ட நாயகியாக நடிக்க, நந்திதா எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்துள்ளார். அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
மேலும், சாதாரணமாகவே தனது படங்களில் காதல் நாயகிகளாக நடிக்கும் நடிகைகளுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, இந்த படத்தில் நந்திதாவுடனும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். கதைப்படி அவர்கள் கணவன்-மனைவி என்பதால் ரொமான்சுடன் கூடிய நெருக்கமான காட்சிகளையும் இயல்பாக படமாக்கியிருக்கிறாராம் செல்வராகவன். அந்த வகையில், இதுவரை லிமிட் தாண்டாமல் நடித்து வந்துள்ள நந்திதா, இந்த படத்தில் கொஞ்சம் கிளாமராகவும் நடித்து இருக்கிறாராம்.