ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆரம்ப காலத்தில் பிரபலமில்லாத நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து வந்தவர் விஜயசேதுபதி. ஆனால் அவரது தொடர் வெற்றி காரணமாக அவருடன் நடிக்க தயங்கிய முன்னணி நடிகைகள்கூட இப்போது மறுபேச்சில்லாமல் கால்சீட் கொடுத்து நடிக்கின்றனர். அந்த வகையில், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகை களுடன் நடித்து விட்ட விஜயசேதுபதி, தனது புதிய படங்களிலும் முன்னணி ஹீரோயினிகளுடன்தான் நடித்து வருகிறார். இதனால் அவருடன் முன்பு ஜோடி சேர்ந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
மேலும், தற்போது அதர்வா நாயகனாக நடித்து வரும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க விஜயசேதுபதியை அணுகியுள்ளனர். ஏற்கனவே சில படங்களில் நட்புக்காக நடித்துள்ள அவர், உடனே சம்மதம் சொல்லி விட்டாராம். அதேசமயம், அந்த படத்தில் நயன்தாராவும் இருப்பதால் அவருடன் தனக்கு ஒரு டூயட் பாடல் வேண்டும் என்று அன்பான கண்டிசன் போட்டுள்ளாராம். விஜயசேதுபதி பாடல் காட்சியில் நடித்தால் இன்னும் பெரிய படமாகி விடும் என்பதால் அதற்கான ஆலோசனை நடந்து வருவதாக சொல்கிறார்கள்.