ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்களில் ‛அகிரா' மற்றும் ‛போர்ஸ்-2' படங்களில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில் நடித்தார். இப்படத்தை தொடர்ந்து சோனாக்ஷி நூர் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாகிஸ்தானின் சபா இம்தியாஸ் எழுதிய கராச்சி யு ஆர் கில்லிங் மீ என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சோனாக்ஷி நூர் என்ற ரோலில் நடிக்கிறார். சன்ஹில் சிப்பி இயக்குகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்., 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக இப்படம் ஏப்.,7-ம் ரன்பீரின் ஜகா ஜசூஸ் படத்துடன் ரிலீஸாக இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.
இதைப்பற்றி சோனாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது...."நூர் ரோல் புயல் போன்றது, சூரியன் போன்று பிரகாசிப்பவள் அவள் வேறு யாருமல்ல நூர் தான், அந்த நூர் நான் தான், 2017, ஏப்.,21-ம் தேதி வருகிறாள்'' என்று கூறியுள்ளார்.