ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான படம் ‛ராக் ஆன் 2'. ஸ்ரத்தாவுடன் பரான் அக்தர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2008-ம் ஆண்டு வெளிவந்த ராக் ஆன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. தற்போது ‛ஓகே ஜானு' படத்தில் நடித்து வரும் ஸ்ரத்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராக் ஆன் 2 படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது... ‛‛ராக் ஆன் 2 படம் தோல்வியை தழுவியது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று. இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளோம், அப்படி உழைத்தபடம் தோல்வியடைந்தால் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்திருந்தது, ஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரசிகர்கள் இந்தப்படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
ஸ்ரத்தா நடித்து வரும் ‛ஓகே ஜானு' படம் அடுத்தாண்டு ஜன., 13ம் தேதி ரிலீஸாக உள்ளது.