ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலையில் முடியின்றி வழுக்கை தலையாக நடிக்க ஒரு துணிவு வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை கஜோல். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்த கஜோல், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆயத்தமாகிவிட்டார். அவர் தற்போது ஒரு படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க உள்ளார். இப்படத்தை கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நீங்கள் வழுக்கை தலையாக நடிப்பீர்களா.?, உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா...? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கஜோல், ‛‛இந்தமாதிரி ஒரு தோற்றத்தில் இருப்பதற்கு முதலில் தைரியம் வேண்டும். சினிமாவில் நடிப்பதற்கும் சரி, இல்லை நிஜ வாழ்க்கையிலும் சரி இந்த மாதிரி இருப்பதற்கு ஒரு துணிவு கண்டிப்பாக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.