மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'ஆஹா கல்யாணம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வாணி கபூர். நல்ல அழகும், திறமையும் இருந்தும் அவரால் தமிழில் நீடிக்க முடியவில்லை. மீண்டும் ஹிந்திக்கே போனார். தமிழில் நடிப்பதற்கு முன்பே ஹிந்தியில் சுசாந்த் சிங் ராஜ்புட் உடன் 'சுத் தேசி ரொமான்ஸ்' என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் எல்லாம் நடித்தவர், தற்போது ரன்வீர் சிங்குடன் 'பெபிகர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒருபாடல் முழுக்க ரன்வீருடன் முத்த மழை பொழிந்துள்ளார்.
சமீபத்தில், 'பெபிகர்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வாணி கபூருடன் சுசாந்த் சிங், ரன்வீர் சிங் இருவருடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளீர்கள். இதில் யார் பெஸ்ட் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வாணி, ''இது நியாயமற்ற கேள்வி என்று சற்று நேரம் அமைதியாக இருந்தவர் சிறிதுநேரம் கழித்து ரன்வீர் சிங் தான் பெஸ்ட்'' என்று கூறினார்.
பெபிகர் படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இப்படம் டிசம்பர் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது.