சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் ‛ஒய்நாட்' ஸ்டுடியோஸ் தற்போது, மாதவன் - விஜய் சேதுபதியை வைத்து முதன் முறையாக "விக்ரம் வேதா" எனும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி இயக்குகிறார். விக்ரமுடன் கதிர், வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத், "ஆண்டவன் கட்டளை" புகழ் ஹரீஷ் பெரடி, பிரேம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். P.S.வினோத் ஒளிப்பதிவு செய்ய, சாம் C.S இசையமைக்கிறார்.
கேங்ஸ்டர் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்திலும், மாதவன் என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்திலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை உலகமெங்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக R.ரவீந்திரன் வெளியிடுகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.