ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இரு மாநிலங்களின் எல்லையில் வாழும் மக்கள் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களின் வாழ்வியலை சொல்லும் படம்தான் கொஞ்சம் கொஞ்சம். படம் முழுவதும் கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமப்புரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழந்தைகளின் தந்தை, தாய் இருவரில் ஒருவர் மலையாளியாக இருப்பார், அல்லது தமிழராக இருப்பார். படத்தின் ஹீரோயின் தந்தை தமிழ், தாய் மலையாளம் இப்படித்தான் கதையும் இருக்கும்" என்கிறார் கொஞ்சம் கொஞ்சம் படத்தின் இயக்குனர் உதய சங்கரன்.
மிசோமா புரொடக்ஷன் சார்பில் சி.கே.பெட்டி, பி.ஆர்.மோகன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கோகுல் கிருஷ்ணா, நீனு, அப்புக்குட்டி, ஜாங்கிரி மதுமிதா, பிரியா மோகன் நடித்துள்ளனர். வல்லவன் இசை அமைத்துள்ளார். பி.ஆர்.நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். "அப்புக்குட்டி பார்டரில் கடை நடத்துபவராக வருகிறார். அவரது மனைவியாக மதுமிதா நடித்துள்ளார். அக்கா, தம்பி பாசத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது" என்கிறார் இயக்குனர் உதய சங்கரன்.