ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலை. ஆண்டனி என்ற புதுமுகத்துடன் ஜோக்கர் படத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். லெனின் பாரதி இயக்கி உள்ளார்.
கேரள எஸ்டேட்டுகளில் குறைந்த கூலிக்கு உழைக்கும் தமிழர்களைப் பற்றிய கதை. சொந்த நிலம், வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் இவர்களின் நிலை வெளியுலகம் அறியாத ஒன்று. அதனை வெளிச்சம்போட்டு காட்டுகிற படம்.
இந்தப் படம் பஞ்சாபில் நடைபெற்று வரும் குளோபல் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. 250 படங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் மேற்கு தொடர்ச்சி மலை படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது. அடுத்த மாதம் கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தற்போதைய சினிமா என்ற தலைப்பில் திரையிட மேற்கு தொடர்ச்சி மலை தேர்வாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியன் பனோரமா, ஆசிய திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களுக்கு படம் அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த அண்டு மார்ச் மாதம் படத்தை தியேட்டருக்கு கொண்டு வருகிறார்கள்.