ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மயிலு கதாபாத்திரம் மூலம் சினிமாவுக்கு வந்த, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, ஹிந்தி படம் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். பதினாறு வயதினிலே படம் மூலம், சினிமாவுக்கு வந்தவர் ஸ்ரீதேவி. இவர் நடித்த மயிலு கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தமிழை தொடர்ந்து, பல மொழிகளில் நடித்த ஸ்ரீதேவி, ஹிந்திக்கு போனார். அங்கும் கோலோச்சிய அவர், தமிழ், ஹிந்தி திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்தார். ஹிந்தி படத் தயாரிப்பாளர், போனி கபூரை மணந்த ஸ்ரீதேவிக்கு, ஜான்வி, குஷி என, இரு மகள்கள். இதில், ஜான்வி நடிக்க வருகிறார் என, தகவல் வந்த போது, ஜான்வி, சின்ன பெண்; இப்போதைக்கு அவர், நடிக்க வரமாட்டார் என்றார். இந்நிலையில், ஜான்வி, பெரிய பெண்ணாகி விட்டார் என்பதை கூறும் வகையில், ஆண் நண்பர்களுடன் ஜான்வி எடுத்த படங்கள் இணையதளத்தில் வலம் வந்து சூட்டை கிளப்பின. தமிழில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் ஜோடியாக நடிக்க, ஜான்வியை கேட்டனர். தெலுங்கில், ராம் சரண் ஜோடியாக நடிக்கவும் அழைப்பு வந்தது. அந்த வாய்ப்புகளை, ஸ்ரீதேவி ஏற்க மறுத்தார். பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வரும் என, எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்ச, ஹிந்தி பட இயக்குனர் கரண் ஜோகரிடம் மகளுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார். அவரும், ஓகே சொல்லி, வருண் தவான் ஜோடியாக, ஜான்வியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.