ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யாவின் தூரத்து உறவினரான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவை சூர்யா, மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவருமே கடந்த சில வருடங்களாக தள்ளியே வைத்துள்ளனர். 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் சூர்யா சொந்த பட நிறுவனம் தொடங்கிவிட்டார். கார்த்தியோ தன்னுடைய சித்தி மகனான எஸ்.ஆர்.பிரபுவை பார்ட்னராக வைத்து ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் இரண்டு பட நிறுவனங்களை தொடங்கிவிட்டார்.
சூர்யா, கார்த்தி இருவரும் ஞானவேல்ராஜாவுக்கு இனி கால்ஷீட் கொடுக்க வாய்ப்பில்லை என்று திரையுலகில் உள்ளவர்கள் அரசல்புரசலாக பேசத்தொடங்கிவிட்டனர். இதை உண்மையாக்குவதுபோல் சூர்யா, கார்த்தி நடிக்காத படங்களின் விநியோகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் ஞானவேல்ராஜா.
'முத்துராமலிங்கம்', 'இவன் தந்திரன்' உட்பட சில படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் அடுத்து 'ஹர ஹர மகாதேவகி' என்ற படத்தில் நடிக்கிறார். 'தங்கம் சினிமாஸ்' சார்பில் எஸ்.தங்கராஜ் என்பவர் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். இதுபோல் வேறு சில லோ பட்ஜெட் படங்களையும் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார் ஞானவேல்ராஜா.