பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சுசிந்திரன் டைரக்டராகவும், நடிகர் விஷ்ணு ஹீரோவாகவும் அறிமுகமாகினர். முதல்படமே இருவருக்கும் வெற்றியை தேடி தந்தது. வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பிறகு நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என்று அடுத்தடுத்த படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்து விட்டார் டைரக்டர் சுசிந்திரன். தற்போது விக்ரம்மை வைத்து ராஜபாட்டை என்று அதிரடி ஆக்ஷன் படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ராஜபாட்டை படத்திற்கு பிறகு சுசிந்திரன் மீண்டும் தனது முதல்பட நாயகன் விஷ்ணுவை வைத்து படம் இயக்க உள்ளார். முழு நீள காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இப்படம் உருவாக இருக்கிறது. விரைவில் இப்படத்தை பற்றிய அறிவிப்பு, அதனைத்தொடர்ந்து சூட்டிங்கும் தொடங்க இருக்கிறது.