ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்ரீதர் இயக்கத்தில் 1963ம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதில் கல்யாண குமார், தேவிகா, நம்பியார் நடித்திருந்தார்கள். இது ஜென்மங்கள் தாண்டிய பேய் படம். தற்போது செல்வராகவன் இதே டைட்டிலில் படம் இயக்கி வருகிறார். இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. படம் பற்றி இதுவரை எந்த தகவலையும் செல்வராகவன் வெளியிடவில்லை. நேற்று வெளியிப்பட்ட டீசர் இந்தப் படமும் பேய் படம்தான் என்பதை உணர்த்தியது.
தொழில் அதிபரான ராமசாமி, மரியா என்ற பெண்ணை காதலிக்கிறார். பின்பு ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ராமசாமி மரியாவை என்ன காரணத்தாலோ கொன்று புதைத்து விடுகிறார். அல்லது அவர் தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் தனது பெயரை ராம்சே என்று மாற்றிக் கொண்டு ஸ்வேதாவோடு அவர் வாழும்போது இறந்து போன மரியா ஆவியாக வந்து ராமசாமியை என்ன செய்கிறார் என்பதுதான் கதை என்று டீசர் உணர்த்துகிறது. ராமசாமியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
இதில் மரியாவாக நடித்திருப்பவர் ரெஜினா, ஸ்வேதாவாக நடித்திருப்பவர் நந்திதா.
காதல் மற்றும் காமத்தை மையமாக வைத்து படம் இயக்கும் செல்வராகவனும் டிரண்டுக்கு ஏற்ற மாதிரி பேய் படத்துக்குள் வந்திருக்கிறார். பேய் பாடமானாலும் அவரது அந்த முத்திரையும் தெரிகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..." என்ற பாடல் இருக்கிறது. "ராம்சே.... ஐ ஏ எம் ராம்சே..." என்ற தீம் சாங் உள்ளது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.