ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜயபிரகாஷ், தயாரிக்கும் படம் முத்துராமலிங்கம். புதுமுக இயக்குனர் ராஜதுரை இயக்குகிறார். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், பிரபு, நெப்போலியன், சுமன், வம்சி கிருஷ்ணா, சின்னி ஜெயந்த், சிங்கம்புலி, சுகன்யா, ரேகா நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் இளையராஜா இசையில், கமல்ஹாசன், முத்துராமலிங்க தேவர் புகழ்பாடும் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தெக்கத்தி சிங்கமடா, முத்துராமலிங்கமடா
சுத்த பசும்பொன் தங்கமடா
எக்குலத்துக்கும் சொந்தமடா
மத்ததெல்லாம் தள்ளு
அந்த பேரை மட்டும் சொல்லு...
இந்த பாடலின் புரமோ வீடியோவில் ஹீரோ கவுதம் கார்த்திக் முத்துராமலிங்க தேவர் சிலையை வணங்கும் காட்சியும் இடம்பெறுகிறது. "இது ஜாதியை உயர்த்தி பிடிக்கும் படம் அல்ல" என்று இதன் இயக்குனர் ராஜதுரை பல நேர்காணல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.