ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லக்ஷ்மன் - ஜெயம் ரவி - ஹன்சிகா கூட்டணியில் உருவாகி வரும் ‛போகன்'. கூடவே இந்தப்படத்தில் அரவிந்த்சாமியும் இணைந்திருக்கிறார். போகன் படத்தின் கதை என்னுடையது என்று ஆண்டனி என்பவர் புகார் எல்லாம் கொடுத்தார். இதில் அவர் தாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இரண்டுமே ஹாலிவுட்டிலிருந்து திருடப்பட்ட கதை என எழுத்தாளர் சங்கம் போட்டு உடைத்தது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க படத்தின் படப்பிடிப்பு எந்த பிரச்னையும் இன்றி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
படத்தின் கடைசி பாடலை வெளிநாட்டில் படமாக்கி வரும் போகன் படக்குழுவினர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி போகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். தற்போது, அரவிந்த்சாமிக்கான பாடலை ரஷ்யா நாட்டை சார்ந்த ஐம்பது நடன கலைஞர்கள் கொண்டு நடனம் அமைத்து வருகின்றனர். நடன இயக்குனர் ஷெரிப் இதை படமாக்கி வருகிறார்.
இதுப்பற்றி இயக்குநர் லக்ஷ்மன் கூறியிருப்பதாவது... "நாங்கள் தற்போது அரவிந்த் சுவாமி பாடியிருக்கும் போகன் படத்தின் இறுதி பாடலை படமாக்கி கொண்டிருக்கிறோம். இந்த பாடலை முழுக்க முழுக்க அரவிந்த் சுவாமிக்காக உருவாக்கி வருகிறோம். நிச்சயமாக இந்த பாடல் அவரை ஆஜானுபாகுவான ஆணழகனாக பிரதிபலிக்கும். நடன இயக்குனர் ஷெரிப்பிற்கு இது நூறுவது பாடல். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு வந்த அவர், தற்போது தன்னுடைய நூறாவது பாடலை பிரபுதேவாவின் தயாரிப்பிலேயே உருவாகும் படத்தில் நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு சில தினங்களில் நாங்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட இருக்கிறோம்.
இன்னும் மூன்று தினங்களில் நாங்கள் இந்த பாடலின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு சில மெருகேற்றும் பணிகளோடு எங்கள் போகன் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய இருக்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாங்கள் எங்களின் போகன் படத்தை வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்" என்று உற்சாகமாக கூறுகிறார் போகன் படத்தின் இயக்குனர் லக்ஷ்மன்.