விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார்தான். சுமார் பத்து படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். ப்ரூஸ்லீ மற்றும் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படங்களின் இறுதிகட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ராஜீவ் மேனன், சசி, பாண்டிராஜ் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த படங்களுக்கு முன்னதாக, சரத்குமாருடன் இணைந்து அடங்காதே படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அடங்காதே படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படங்களைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு பட இயக்குநர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்திருக்கிறது. காமெடி கலந்த வில்லனாக நடிக்கவிருக்கிறார் வடிவேலு என்பதே அந்த தகவல்.