ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தீபாவளியை முன்னிட்டு தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, மா.கா.பா. நடித்த கடலை ஆகிய மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவை பற்றிய திரைக்கு வராத கதை என்ற படமும் தீபாவளி வெளியீடு என்று சொல்லப்பட்டு வந்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் அந்தப் படம் சில வாரங்கள் கழித்து வெளிவர உள்ளதாகவும் படத்துறையில் தகவல் அடிபடுகிறது. இதற்கிடையில் தீபாவளி படங்களில் கொடி, காஷ்மோரா படங்களுக்குத்தான் போட்டி என்ற வகையில் முன்பதிவில் கொடி படமே முதலிடம் பிடித்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.
கார்த்தியின் கேரியரிலேயே பெரிய பட்ஜெட் படம், அதிக தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்றெல்லாம் 'காஷ்மோரா' பற்றி பில்ட்அப் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படியும் முன்பதிவில் காஷ்மோராவை விட தனுஷ் இரட்டை வேடத்தில நடிப்பதாலோ என்னவோ கொடி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு. அதோடு முன்பதிவிலும் முந்திச் சென்று கொண்டிருக்கிறது.