உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் |
எம்.ஜி.ஆரின் கனவு படம், லட்சியப் படம் நாடோடி மன்னன். அதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டி நாடோடி மன்னை தயாரித்து, இயக்கினார் எம்.ஜி.ஆர். இப்படி எல்லாவற்றையும் விற்று படம் எடுக்குறீங்களே என்று கேட்டபோது "மக்களை நம்புகிறேன். படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி" என்றார்.
அதற்கு முன் பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்த பானுமதியையே நாடோடி மன்னனிலும் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். பானுமதி கொஞ்சம் திமிர் பிடித்தவர் என்று தெரிந்தும் அவரது திறமையை மதித்து நடிக்க வைத்தார். எம்.ஜி.ஆர் எந்தப் படத்தில் நடித்தாலும், யார் இயக்கினாலும் தனக்கு திருப்தி வரும் வரையில் ஒரே காட்சியை திரும்ப திரும்ப எடுக்கச் சொல்வார். இது அவரது குணம்.
நாடோடி மன்னன் சொந்தப் படம். அவரே இயக்குனர் சொல்லவா வேண்டும். சில நாட்கள் ஒரு காட்சிகூட எடுக்க முடியாமல் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. பானுமதி ஒரு டேக் நடிகை. ஆனால் உடன் நடிப்பவர்கள் சொதப்பும்போது அவர் திரும்ப நடித்துதான் ஆக வேண்டும். இப்படி பல காட்சிகள் திரும்ப திரும்ப எடுத்தது அவருக்குப் பிடிக்கவில்லை. "ஒரே காட்சியை இத்தனை முறை எடுக்கிறீர்களே" என்று எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்டார். உடனே எம்.ஜி.ஆர் "இது என் சொந்தப் படம். நான்தான் இயக்குனர் என் இஷ்டப்படி நடிப்பதாக இருந்தால் நடியுங்கள் இல்லாவிட்டால் விலகி கொள்ளுங்கள்" என்றார். மறுநாளிலிருந்து பானுமதி ஷூட்டிங் வரவில்லை. எல்லோரும் என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர் அசரவில்லை. பானுமதி இறந்துவிட்டதாக கதையை மாற்றி அந்த இடத்துக்கு சரோஜாதேவியை கொண்டு வந்தார். கதையில் அது கச்சிதமாக பொருந்தியது. பானுமதி கோபித்துக் கொண்டு சென்றாலும் நாடோடி மன்னன் வெற்றி விழாக்களில் கலந்து கொண்டார். அதன் பிறகும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆரும் பின்னாளில் அவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தார்.