ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திருநெல்வேலி மண்வாசனை கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை திருநெல்வேலி தவிர பல ஊர்களில் நடத்தப் பட்டு விட்டது. இந்நிலையில், படத்தின் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை நெல்லையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். மேலும், இந்த படத்தை அடுத்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில், அந்த படத்தில் நடிக்க, நடிகர் - நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருக்கும் நிலையில், அனுஷ்காவை இன்னொரு நாயகியாக நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நயன்தாரா நடிக்கும் படத்தில் அவரை விட முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் அனுஷ்கா நடிக்க மாட்டார் என்று இப்போது காஜல்அகர்வாலை நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே விஜய்யு டன் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து விட்டு தற்போது அஜீத்துடன் நடித்து வரும் காஜல், விஜய் படம் என்றதும் டபுள் ஹீரோயினி என்றாலும் டபுள் ஓகே சொல்லி விட்டாராம்.