ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாஜி மோகன் இயக்கிய வாயை மூடி பேசவும் படத்தில் மட்ட ரவி என்றொரு குடிகாரன் வேடத்தில் காமெடி செய்தவர் ரோபோ சங்கர். அதற்கு முன்பு பல படங்களில் அவர் நடித்திருந்தபோதும் இந்த படம்தான் அவரை முழுசாக வெளிச்சம் போட்டுக்காட்டியது. அதையடுத்து ரொம்ப நல்லவன்டா நீ, மாரி, மாயா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களுக்குப்பிறகு சில படங்களில் ஷோலோ காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், ரிலீசாகும் எந்த படங்கள் தன்னை பாதித்தாலும் உடனே அதில் நடித்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதிலும் முதல் நபராக இருந்து வருகிறார் ரோபோ சங்கர்.
அந்த வகையில், தன்னைப்போலவே விஜய் டிவியில் ஸ்டான்டப் காமெடி செய்து புகழ் பெற்று சினிமாவுக்குள் வந்த சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியானதும் முதல்நாளே படத்தைப்பார்த்து விட்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் ரோபோ சங்கர். அதோடு, அப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த நர்ஸ் கெட்டப்பில் ஒரு செல்பி எடுத்து தற்போது அதை தனது டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்