ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில், கவனமாக இருக்கிறார் தமன்னா. இப்போது, அவரை தேடி, ஒருசில பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், 'இன்னும் இரு ஆண்டுகளுக்கு, இந்த பக்கம் வந்துடாதீங்க' என, உதட்டை பிதுக்குகிறாராம் தமன்னா. ஆனால், தமிழ், தெலுங்கு படங்கள் வாய்ப்பு வந்தால், உடனடியாக சம்மதிக்கிறாராம். 'ஒரு பாலிவுட் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை தியாகம் செய்துவிட முடியாது' என்கிறார், அவர்.இதற்கிடையே, தமன்னா, திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதற்கு, 75 லட்சத்திலிருந்து, ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால், கடுப்பான அவர், 'இதுபோன்ற தகவல்கள் எல்லாம் இவர்களுக்கு எப்படி தெரிகிறது' என, புலம்புகிறாராம்.