ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன் அமரிஷ்க்கும், கீர்த்தி என்ற பெண்ணுக்கும் சென்னையில் சிறப்பாக திருமணம் நடந்தது. நானே என்னுள் இல்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அம்ரிஷ். பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனான இவருக்கு, நடிப்பை விட இசையமைப்பதில் தான் ஆர்வம் அதிகம். சிறு வயதிலிருந்தே முறைப்படி இசை கற்றவர். நானே என்னுள் இல்லை படத்துக்கும் அவர்தான் இசை அமைத்திருந்தார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா, பரத் நடிக்கும் பொட்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
அம்ரிஷிக்கும், அவரது உறவு பெண்ணான கீர்த்திக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்று(அக்., 19-ம் தேதி) இவர்களது திருமணம், சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. பிரபு, இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.