ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் சினிமா மீது திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. வரிசைகட்டி வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் டப்பிங் படங்கள் மூலம் அறிமுகமாகிறவர்கள் அதன் பிறகு நேரடி படங்கள் மூலம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபுவை நேரடி தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வருகிறார். நாகார்ஜுனாவும், ராணாவும் ஏற்கெனவே நடித்து வருகிறார்கள். அடுத்து அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் தமிழுக்கு வருகிறார். இவர் ஏற்கெனவே பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ராதாமோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்தவர்.
தமிழில் அப்புச்சி கிராமம் படத்தை இயக்கியவர் வி.ஆனந்த். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான இவர் தற்போது, தெலுங்கில் எக்கடக்கி போத்தாவு சின்ன வாட என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நிகில், நந்திதா நடிக்கிறார்கள். இந்தப் படம் முடிந்ததும் அல்லு சிரிஷ் நடிக்கும் படம் ஒன்றை இயக்குகிறார். இது சயின்ஸ்பிக்சன் காமெடி கதை. இதில் அல்லு சிரிஷ் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.