ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யூரி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாக்., நடிகர்களான பவாத்கான், மகிராகான் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதில் ரயீஸ் படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக மகிராகான் நடித்திருக்கிறார். இவர் இப்படத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இதை தயாரிப்பாளர் ரித்தேஷ் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு புரியவில்லை, எங்கிருந்து இதுபோன்ற செய்திகள் எல்லாம் வருகிறது என்று தெரியவில்லை. மகிரா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏற்கனவே எடுத்துவிட்டேன். சுமார் 45 நாள் அவர் பங்கேற்றார். சிலர் தேவையில்லாமல் கிளப்பும் யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை, இதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. மேலும் ரயீஸ் படம் பற்றியும் நான் எதுவும் பேச விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார்.