ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருவ மழை தப்பி வருவதாக வானிலை அறிக்கை சொன்னாலும் வாய்ப்பு மழை தப்பவில்லை ஜி.வி.பிரகாசுக்கு. எல்லா தயாரிப்பாளர்களுமே ஜி.வி.பிரகாசை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட், மினிமம் கியாரண்டி இருப்பதால் இந்த ஆர்வம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு கடைசியாக வெளிவந்த படம். அடுத்து வெளிவரப்போகிற படம் கடவுள் இருக்கான் குமாரு. இந்தப் படத்தை தொடர்ந்து புரூஸ்லீ, அடங்காதே படங்கள் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் டைட்டில் 4ஜி.
இன்றைக்கு எல்லோர் வாயும் உச்சரிக்கும் ஒரே சொல் 4ஜி. ரிலையன்ஸ் ஜியோ 4ஜியை அறிமுகப்படுத்திய பிறகு நாடெங்கும் இதே பேச்சுதான். அதையே தலைப்பாக்கி விட்டார்கள். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் வெங்கட் பக்கர் இயக்குகிறர். பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி.பிரகாஷே இசை அமைக்கிறார். அவருடன் சதீஷ், சுரேஷ் மேனன் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. திருக்குமரன் எண்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது.