ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி, குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, கபாலி என பல படங்களில் நடித்திருப்பவர் அட்டகத்தி தினேஷ். தற்போது உள்குத்து, அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் உள்குத்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மீனவ பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார் தினேஷ். இந்த படத்தில் தினேஷ் படங்களில் இதுவரையில்லராத அளவுக்கு எட்டு சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், கதைப்படி அத்தனை சண்டை காட்சிகள் அவசியம் தேவை என்பதால், இந்த படத்தில் இரண்டு பாடல்களை மட்டும் வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த இரண்டில் ஒரு மெலோடியை மட்டுமே படத்தில் வைத்து விட்டு இன்னொரு குத்துப்பாட்டை நீக்கி விட்டனர். ஆனால் அந்த குத்துப்பாடல் தினேசுக்கு ரொம்ப பிடித்தமானதாம். இருப்பினும் அந்த குத்துப்பாட்டு படத்தின் வேகத்தை குறைப்பதாக நீக்கியுள்ளனர். இப்போது தினேஷ்-நந்திதா சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடலை மட்டுமே படத்தில் வைத்துள்ளார்கள். அதோடு, தீபாவளிக்கு முன்பே திரைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்குத்து படம், தீபாவளிக்கு பிறகுதான் வெளியாகிறதாம்.