சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் சினிமாவில் இந்தாண்டிலேயே இதுவரை 6 படங்கள் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இந்த 6-ல் 5 படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுவும் சமீபத்தில் தொடர்ச்சியாக தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 3 படங்கள் அடுத்தடுத்து சிலவாரங்களில் ரிலீஸாகியுள்ளது. இந்த மூன்று படங்கள் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. இந்தியாவில் கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்றது கேரள சர்வதேச திரைப்பட விழா. கேரளாவில் 21வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது.
இந்தப்பட விழாவில் விஜய் சேதுபதி தயாரித்த, 'மேற்கு தொடர்ச்சி மலை' படம் தேர்வாகியுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. தான் தயாரித்த படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியிருப்பது விஜய் சேதுபதிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.