ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிச்சைக்காரனுக்குப்பிறகு கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்ட விஜய் ஆண்டனி, தற்போது சைத்தான், எமன் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். சைத்தான் படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், எமன் படத்தை ஜீவா சங்கரும் இயக்கியுள்ளனர். இதில் சைத்தான் படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு முன்பே இந்த படம் தொடங்கப் பட்டது. பின்னர் பிச்சைக்காரன் வேகமாக வளர்ந்தபோது இடையிடையே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
ஆக, இப்போது சைத்தான் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதேநேரம் எமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த நேரத்தில் எமன் படம் சம்பந்தப் பட்ட சில விளம்பரங்களை அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் முடுக்கி விட்டபோதும், சைத்தான் ரிலீசுக்கு பிறகு எமன் பட விளம்பரங்களை தொடங்கலாம் என்று கூறியுள்ளாராம் விஜய் ஆண்டனி. மேலும், சைத்தானை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இறுதிகட்ட பணிகள் நடந்தபோதே, சிபிராஜ் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கி விட்டதால், சைத்தான் படத்தின் இறுதிகட்ட பணிகளை தனது மேற்பார்வையிலேயே நடத்தியுள்ளார் விஜய் ஆண்டனி.