ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'தர்மதுரை', 'குற்றமே தண்டனை' படங்கள் அடுத்தடுத்து வெளியாகியதைப்போலவே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'பறந்து செல்லவா', 'கட்டப்பாவை காணோம்' 'முப்பரிமாணம்' ஆகிய மூன்று படங்கள் சில வார இடைவெளியில் வெளியாக உள்ளன. தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது இன்னொரு மகிழ்ச்சியும் சேர்ந்துள்ளது.
தற்போது 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' மற்றும் 'ஜோமோன்டெ சுவிசேஷங்கள்' மலையாள படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து அமீர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். பாலாவின் இயக்கத்தில் நடித்துவிட்ட ஆர்யா அடுத்து அவரது சிஷ்யர் அமீரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாநாயகியாகவும் இன்னொரு கதாநாயகியாக 'பிச்சைக்காரன்' படத்தில் நடித்த சாத்னா டைட்டஸ் நடிக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது. சமீபத்தில்தான் ஒரு விநியோகஸ்தரை ரகசிய திருமணம் செய்து கொண்டார் சாத்னா. எனவே, அவருக்கு பதில் வேறொரு ஹீரோயின் தேடி வருவதாகவும் ஒரு தகவல்.